• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் – கனிமொழி எம்.பி.

October 12, 2018 தண்டோரா குழு

முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.இந்தியாவில் #Metoo என்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள் தற்போது #MeToo இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர்.

திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,தமிழகத்தில் பின்னணி பாடகி சின்மயி Metoo இயக்கம் மூலம் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.இதையடுத்து, #MeToo குறித்து பல்வேறு திரை பிரலங்ககள்,அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,இந்த மீடு இயக்கத்திற்கு திமுக எம்.பி கனிமொழி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும்.#Metoo பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும் எனக் கூறியுள்ளார்”.

மேலும் படிக்க