• Download mobile app
07 Apr 2026, TuesdayEdition - 3709
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது – தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

October 12, 2018 தண்டோரா குழு

நீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்,உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.அவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிப்பதை தடுப்பது குறித்து,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் கொலிஜியம் உறுப்பினர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது இனி நீதிபதிகள் வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும்,வேலை நாட்களில் கருத்தரங்கம்,அரசு விழா போன்றவற்றில் அவர்கள் பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி விடுமுறை பயண சலுகைகளையும் நீதிபதிகளுக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி கோகாய் அறிவுறுத்தினார்.அதைபோல் விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்து விடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க