October 11, 2018
தண்டோரா குழு
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதை கண்டித்து கோவையில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சரணகோஷ யாத்திரை நடைபெறவுள்ளது.
சபரிமலைக்கு பத்து வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்பளித்து உள்ளது.இந்நிலையில் நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன ஆச்சார நடைமுறைகளை அதேபடி தொடர்ந்து பின்பற்ற வலியுறுத்தி கோவை ஸ்ரீ ஐய்யப்பசேவா சங்கத்தின் சார்பில் வருகிற 13ஆம் தேதி சரண கோஷ யாத்திரை நடைபெற உள்ளது.மேலும்,இந்த யாத்திரை சித்தாபுதூர் ஐயப்பசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வி.கே.கே மேனன் ரோட்டில் பஜனையுடன் நிறைவடைகிறது.இதில் அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐயப்ப சேவா சாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.