• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக அறிவிப்பு!

October 10, 2018 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு அவர்களின் உற்பத்தி திறன் சார்ந்த 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்குவது வழக்கம்.இந்தாண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழகுவது தொடர்பாக ஊழியர் சங்கங்களுடன் ரயில்வே நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.

இதன் அடிப்படையில்,2017-18-ம் ஆண்டில்,அடிப்படை சம்பளத்தை கணக்கில் கொண்டு 78 நாள் போனஸ் வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரயில்வே துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 12.30 லட்சம் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில்,ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ 17,௦௦௦ திற்கு மேலாக போனஸ் கிடக்கும்.இந்த போனஸால் மத்திய அரசுக்கு ரூ.2,0௦௦கோடி செலவாகும் எனக்கூறப்படுகிறது.

மேலும் படிக்க