• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பஸ்ப குளத்தை மூட வேண்டும் – பிரபல ஜோதிடர் மூகாம்பிகைதாசன்

October 8, 2018 தண்டோரா குழு

சபரிமலையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பஸ்ப குளத்தை மூட வேண்டும் என கோவையின் பிரபல ஜோதிடர் மூகாம்பிகைதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பால் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் நிலவி வருகிறது. இந்நிலையில் கோவையை சேர்ந்த பிரபல ஜோதிடரான மூகாம்பிகைதாசன் செய்தியாளர்களிடம் பேசிய போது பத்து வருடங்களுக்கு முன்பு இது போன்ற பிரச்சனைகள் சபரிமலைக்கு வரும் என்று தெரிவித்திருந்ததாகவும்,தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனைக்கும் சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பஸ்ப குளமே காரணம் என்றும்,அக்குளத்தை மூடினால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகள் வராது என்றார்.மேலும்,வாஸ்து முறைப்படி இந்தக் குளம் அங்கு இருக்கக் கூடாது என்றும் அந்தக் குளத்தை மூடினால் இந்தப் பிரச்சினை மட்டுமல்ல எதிர்காலங்களில் இது போன்ற எந்தப் பிரச்சினைகளும் வராது என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க