• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

October 2, 2018 தண்டோரா குழு

சென்னை அபிராமபுரத்திலுள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் அர்விந்த் சாமி,சிம்பு,அருண் விஜய்,விஜய் சேதுபதி,பிரகாஷ் ராஜ், ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த படம் செக்க சிவந்த வானம்.இப்படம் கடந்த 27ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில்,சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடப்பட்டுள்ளது.மிரட்டல் வந்ததை அடுத்து இயக்குனர் மணிரத்னம் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.இதனையடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க