October 1, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.தமிழகம் உட்பட நாட்டில் 55 இடங்களில் ஹைட்ராகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதில்,தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டா பகுதியில் 2 இடங்களிலும்,ஓ.என்.ஜி.சி நிறுவனம் 1 இடத்திலும் ஹைட்ரோகார்பன் எடுக்க டெண்டர் எடுத்துள்ளது.குறிப்பாக,சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனமும், நாகையில் வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பது உறுதியாகியுள்ளது.ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி,மக்களின் எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.