• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பருவமழை வரவுள்ளதால் கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தீவிரம்

October 1, 2018 தண்டோரா குழு

வடகிழக்கு பருவமழை அதிகளவு பொழியும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டு உள்ள நிலையில் கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் துவங்கவுள்ளது.சராசரியை விட அதிகளவு மழை இருக்கும் என காலநிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்காமல் கண்காணிக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.வெளிநோயாளிகள்,உள்நோயாளிகள்,பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் தற்போது 15 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கோவை மாவட்ட சுகாதாரத் துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மழை காலங்களில் வரும் நோய் தாக்குதலை தடுக்க குடிநீர் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க