• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இதுபோன்று ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் – கருணாஸ்

September 29, 2018 தண்டோரா குழு

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் மற்றும் தியாகராய நகர் காவல்துறை துணை ஆணையர் குறித்தும் அவதூறாக பேசினார்.

அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அதற்கு வருத்தமும் தெரிவித்தார்.இதற்கிடையில், நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால்,அந்த வழக்கிலும் ஜாமீன் கோரி கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை நேற்று பரிசீலித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.மேலும்,திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களும் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் இருந்து கருணாஸ் இன்று காலை விடுவிக்கப்பட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“என் மீதான வழக்குகளில் உண்மை நின்றது,நீதி வென்றது.ஸ்டெர்லைட் விவகாரத்தில் கருத்து தெரிவித்ததால் என் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதுபோன்று ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க