• Download mobile app
28 Apr 2026, TuesdayEdition - 3730
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் படங்களின் டிரெய்லர் வந்தால் உடனே பார்த்து விடுவேன் – விஜய் தேவரகொண்டா

September 28, 2018 தண்டோரா குழு

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது.இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தெலுங்கு படம் ‘கீதா கோவிந்தம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தற்போது, விஜய் தேவரகொண்டா கைவசம் ‘டாக்ஸிவாலா (தெலுங்கு),நோட்டா (தமிழ்/தெலுங்கு),Dear Comrade (தெலுங்கு) என 3 படங்கள் உள்ளது.இதில் ‘நோட்டா’ படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.இப்படம் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா ஒரு பேட்டியில் தளபதி விஜய் குறித்து கூறியுள்ளார்.அதில்,“நான் விஜய் சார் நடித்த படங்களின் காட்சிகளை மட்டுமே பார்த்திருக்கிறேன்.ஆனால்,இதுவரை அவர் நடித்த எந்த படத்தையும் முழுவதுமாக பார்த்ததில்லை.விஜய் சாரின் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆகையால்,அவர் நடித்த படங்களின் டிரெய்லர் வந்தால் உடனே பார்த்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க