• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா

September 27, 2018 தண்டோரா குழு

நடிகர் நானா படேகர் தன்னை 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்று பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்தவர் தனுஸ்ரீ தத்தா. தமிழில் விஷாலுக்கு ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். காலா படத்தில் ரஜினிக்கு வில்லான நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தில் இடம் பிடித்தவர் இந்திய திரையுலக ஜாம்பவன்களில் ஒருவாரான நடிகர் நானா படேகர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகைதனுஸ்ரீ தத்தா, இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான நானா படேகர்,சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், “ஹார்ன் ஓகே ப்ளீஸ்” என்ற படத்தின் ஷூட்டிங்கின் போது, தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மேலும், “அவர் பொதுவாகவே பெண்களை மதிக்காதவர், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பழக்கம் கொண்டவர், நடிகைகளை அடித்துள்ளார். இப்படிப்பட்டவரை பற்றி எந்த செய்தியும் இதுவரை வந்ததில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் நான் குற்றம் சாட்டிய போதும் யாரும் என்னை நம்பவில்லை” என கூறியுள்ளார். இதுமட்டுமின்றி தற்போது ஹாலிவுட் துவங்கி உலகம் முழுவதும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசிவரும் நிலையில், இந்த உண்மையை நினைவு கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தனுஸ்ரீயின் குற்றச்சாட்டுகளை படத்தின் நடன பயிற்சியாளர் கணேஷ் ஆச்சாரியா மறுத்துள்ளார். தனுஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க