• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் – அமைச்சர் துரைகண்ணு

September 26, 2018 தண்டோரா குழு

அதிமுக ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என அமைச்சர் துரைகண்ணு பேசியுள்ளார்.

ஆளும் அதிமுக கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.அந்த வகையில் தஞ்சையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும்,வேளாண்துறை அமைச்சருமான துரைக்கண்ணு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் ஊழல்,விவசாயத்திற்காக பூச்சி மருந்து வழங்கியதில் ஊழல்,மின்சாரம்,நிலக்கரி பேரத்தில் ஊழல் என அனைத்திலும் ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர்.லஞ்சத்தில் திளைத்தவர்கள் தி.மு.க.வினர்.ஊழலை கண்டு பிடித்தவர்கள் தி.மு.க.வினர் தான்.இதனை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.இந்த ஆட்சி இன்றைக்கு கவிழ்ந்து விடும்,நாளைக்கு கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் சிலர் பேசி வருகிறார்கள்.தமிழக அரசு வறட்சியிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது.வேளாண்மைத்துறை,உள்ளாட்சித்துறை என அனைத்திலும் வளர்ச்சி.தமிழகத்தில் எடப்பாடி,ஓ.பி.எஸ்., தஞ்சை மண்ணின் மைந்தன் வைத்திலிங்கம் இருக்கும் வரை இந்த ஆட்சியை,கட்சியை எவராலும் அசைக்க முடியாது.இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்”.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க