• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

September 5, 2018 தண்டோரா குழு

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கெளதம் மேனன் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’,தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பி.மதனுடன் இணைந்து கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

தனுஷ் ஹாலிவுட் படம்,மாரி 2 படத்தில் பிஸியாக இருந்ததால் இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில்,இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் துவங்கியது.இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சசிகுமார், தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் படப்பிடிப்பின் கடைசி நாளான நேற்று படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய கவுதம் மேனன்,படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர்.மேலும்,அவர்கள் வெட்டியகேக்கில் தீபாவளி வாழ்த்துக்கள் என இருந்தால் இப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமானது.

மேலும் படிக்க