• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்யுடன் நடிக்க இருந்த எனது கனவு நினைவாகி இருக்கிறது – வரலக்ஷ்மி சரத்குமார்

September 3, 2018 தண்டோரா குழு

விஜய்யுடன் நடிக்க வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாக நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார்.விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மேலும்,ராதாரவி,பழ.கருப்பையா,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க,கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய,ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் விஜய்யுடன் நடிக்க வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாக நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” சர்கார் படத்தில் எனது ஷெட்யூல் முடிந்து விட்டது.இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸூக்கும்,சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி.தளபதி விஜய்யுடன் நடிக்க இருந்த எனது கனவு நினைவாகி இருக்கிறது.தீபாவளிக்கு வெயிட் பண்ண முடியாது,பட்டாச ரெடி பண்ணுங்க” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க