September 1, 2018
தண்டோரா குழு
ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஆடவர் பாய்மர படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் வருண் தக்கார்,கணபதிக்கு ரூ.20 லட்சம் ஊக்கப்பரிசு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் பாய்மர படகு போட்டியில் வருண் தாகுர்,கணபதி செங்கப்பா ஆகியோர் கலந்துக் கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனர்.இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 14 தங்கம்,23 வெள்ளி,29 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஆடவர் பாய்மர படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் வருண் தக்கார்,கணபதிக்கு ரூ.20 லட்சம் ஊக்கப்பரிசு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.