• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவை தொடர்ந்து மஹத்தை அடித்த ரம்யா வைரலாகும் வீடியோ

August 29, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைகாட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ்2 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல பெயருடன் இருந்த மகத் கடந்த சில நாட்கள் செய்த செயலால் தன் பெயரை இழந்தார். இதையடுத்து, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றபட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகத், நேராக சிம்புவை சந்தித்தார். இரண்டு மாதங்களுக்கு பின்னர் உயிர் நண்பரை சந்தித்த சிம்பு, மகத்தின் கன்னத்தில் பளார் பளாரென செல்லமாக அறைந்தார்.

இந்நிலையில், சிம்புவை தொடர்ந்து மஹத்துக்கு முன்பே பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய ரம்யாவை மஹத் சந்தித்துள்ளார். அப்போது முடியை பிடித்து ரம்யா பாசமாக அவரை அடித்துள்ளார். அதற்கான வீடியோவை, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்ற பழமொழியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்யா வெளியிட்டுள்ளார்.

அதில், ரம்யா அடிக்கும் போது மகத் ’ஐ மிஸ் யூ மும்தாஜ்’, பிக் பாஸ் இது பிசிகல் வைலன்ஸ் என்று மஹத் கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க