August 23, 2018
தண்டோரா குழு
பாரளுமன்றத்தில் பிரதமர் மோடியை நான் கட்டித் தழுவியதை காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் விரும்பவில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஜெர்மனி சென்றுள்ளராகுல் ஹம்பர்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பாஜக அரசு செயல்படுத்திய மூன்று திட்டங்கள் இந்திய மக்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது. அந்த மூன்றும், சிறுபான்மையினர் மற்றும் தலித்கள் கும்பல்களால் தாக்கப்படுவது, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை தான். ஆனால், இவ்வாறான வளர்ச்சிக்கு பல ஆபத்துக்கள் உள்ளன. இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. ஆனால் அதனை கண்டுகொள்ள பிரதமர் மறுக்கிறார். அது மிகப் பெரிய பிரச்சனை என்பதை நீங்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனது பாட்டி மற்றும் தந்தையை வன்முறையில் இழந்தவன் நான், எனவே வன்முறையினால் தனிப்பட்ட முறையில் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். இதில் இருந்து மீண்டு வர எனக்கு கிடைத்த ஒரே வழி தவறு செய்தவர்களை மன்னிப்பது தான். நம் மீது மற்றவர்கள் வெறுப்பை உமிழ்ந்தாலும் பதிலுக்கு நாம் வெறுப்பை தூண்டும் வகையில் பேசக் கூடாது. என் மீது வெறுப்பை தூண்டும் விதமாக பிரதமர் தொடர்ந்து பேசி வருகிறார்.ஆனால், அவரைப் போலவே பதிலுக்கு நானும் பேசாமல் இந்த உலகம் மிகவும் மோசமானது அல்ல என்பதை அவரிடம் கூற விரும்பினேன்.அதற்காகவே அவர் இருக்கும் இடம் சென்று அவரை கட்டித் தழுவினேன். இந்த நற்குணத்தை தான் நாம் மகாத்மா காந்தியிடம் இருந்து கற்றுக்கொண்டோம்.நான் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்ததை எங்கள் கட்சியை சேர்ந்த சிலரே விரும்பவில்லை.ஆனாலும் அவர்களின் எண்ணத்தை நான் ஆதரிக்கவில்லை என்றார்.
மேலும், என் அப்பா படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த மனிதர் இலங்கை மண்ணில் கொல்லப்பட்டு கிடந்ததை நான் விரும்வில்லை. அழும் அவரது குழந்தைகளை தான் நான் அங்கு பார்த்தேன்.