• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

25 வயது இளம் பாடகருடன் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்

August 18, 2018 தண்டோரா குழு

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய காதலர் நிக் ஜோனாஸுக்கும் இன்று மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட்டிலும் கால்பதித்துள்ளார். இதுமட்டுமின்றி பல்வேறு வெப் சீரிஸ் தொடர்ககளிலும் நடித்து வருகிறார்.இதற்கிடையில், பாப் பாடகர் நிக் ஜோனாஸும், நடிகை பிரியங்கா சோப்ராவும் 2017-ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஒன்றாக கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்கள்.

இதனைத் தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகவே சென்றனர். இதனால் இருவரும் காதலித்து வருவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், தற்போது 36 வயதான பிரியங்காவும், 25 வயதுடைய நிக் ஜோனாஸும், திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி அவர்களது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் இன்று நடைபெற்றது.

மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் மும்பை இல்லத்தில் இந்திய முறைப்படி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக நிக் ஜோனாஸின் பெற்றோர்கள் மும்பைக்கு வந்துள்ளனர். இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டாருக்கும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனையடுத்து, பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க