• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் வீட்டில் 5 நிமிடம் கதவு திறந்திருக்கும் வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம் – கமல்ஹாசன்

August 18, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.சனி மற்றும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் போட்டியாளர்கள் முன்னிலையில் பேசுவார்.

இந்நிலையில்,இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான 2 புரோமோக்களை பிக்பாஸ் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.முதல் ப்ரோமோவில் ஐஸ்வர்யா மஹத் மற்றும் மும்தாஜ் தூங்குவதை பற்றி ஆவேசமாக கத்தி பேசியது மட்டுமில்லாமல் கதவை திறங்க பிக் பாஸ் எனவும் கத்துகிறார்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த கமல்ஹாசன் 5 நிமிடம் கதவு திறந்திருக்கும் வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம்.சும்மா பூச்சாண்டி காட்டக்கூடாது எனக் கூறுகிறார்.அப்போது ஐஸ்வர்யா எழுந்து வெளியேற முயற்சிக்கிறார்.இரண்டாவது ப்ரோமோவில் ஐஸ்வர்யாவை போல செய்ய சொல்லி கமல்ஹாசன் மும்தாஜிடம் கூறுகிறார்.அதற்கு மும்தாஜும் ஐஸ்வர்யா போல் அப்படியே கத்தி காட்டுகிறார்.அதுமட்டுமில்லாமல் நீங்க மனுஷனா? என கேட்க ஐஸ்வர்யா நீங்க மனுஷன் இல்லை என கூறுகிறார்.அப்போது மஹத் இது தான் மும்தாஜின் உண்மையான முகம் எனக் கூறுகிறார்.இதனால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க