• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குகிறார் விஜய்

August 15, 2018 தண்டோரா குழு

முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைபடமாக எடுப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில்,மறைந்த நடிகை சாவித்திரி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரது வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைபடமாக எடுக்க முயற்சிகள் நடந்து வந்தது. எனினும் யார் இப்படத்தை இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை ஏ.எல். விஜய் இயக்கவுள்ளார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை விப்ரி மீடியா நிறுவனம் சார்பில் விஸ்ணு வர்தன் இந்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார். இவர் கபில் தேவ் மற்றும் என்.டி.ஆர் வாழ்கை வரலாற்று படங்களை தயாரித்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறதாம்.மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் ஜெயலிதாவின் பிறந்த நாளான பிப்.24ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க