• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றிய ‘பியார் பிரேமா காதல்’

August 9, 2018 தண்டோரா குழு

முன்னாள் முதல்வரும்,தி.மு.க. தலைவருமான கருணாநிதி மறைவைத் தொடா்ந்து இன்று வெளியாகவிருந்த பியாா் பிரேமா காதல் படம் (ஆகஸ்ட் 10)ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தொிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், ‘கே புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பியார் பிரேம காதல்’
இப்படத்தில் பிக் பாஸ் -1 போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண்,ரைசா ஜோடியாக நடித்துள்ளனர்.இந்த படம் (ஆகஸ்ட் 9)ம் தேதி (வியாழன் கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இழப்பு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சோகத்தை பகிா்ந்து கொள்ளும் விதமாக பியாா் பிரேமா காதல் படத்தின் வெளியீடு ஒருநாள் தள்ளி வைக்கப்படுகிறது.மேலும்,அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டா்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தொிவித்துக் கொள்கிறோம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க