• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீங்க வேடிக்கை பாருங்க..நான் வேலையை பார்க்கிறேன் – கமல்

August 4, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதுவரை 4 பேர் வெளியாகியுள்ளனர். அதன்படி 11 பேர் பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் டாஸ்க் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட சர்வாதிகாரி டாஸ்க் பிக்பாஸ் பார்வையாளர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஐஸ்வர்யாவின் நடவடிக்கை குறித்தும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால், இந்த வாரம் ஐஸ்வர்யா மீது ஏதும் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா என பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சர்வாதிகாரி டாஸ்க் குறித்து கமல்ஹாசன் நடவடிக்கை எடுக்க இருப்பதாக புதிய புரமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

பேசியுள்ள கமல்ஹாசன் தினமும் இரவு 9 மணிக்கு பிக்பாஸ் பார்க்க வாங்க எனக்கூறுவது நான் வாங்கும் சம்பளத்திற்கு செய்ய வேண்டிய வேலை. அதற்கும் மேல் கடமையும் பொறுப்பும் எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். கமல்ஹாசன் என்ன செய்யப்போகிறார் என வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். நீங்க வேடிக்கை பாருங்க..நான் வேலையை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க