• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபுசாலமனின் கும்கி 2 வில் இணையும் பிரபல நடிகை!

August 2, 2018 தண்டோரா குழு

பிரபு சாலமன் இயக்கத்தில்,லிங்குசாமி தயாரிப்பில், விக்ரம் பிரபு –லஷ்மிமேனன் தமிழில் அறிமுகமான “கும்கி” படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து,ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் “கும்கி 2” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கும்கி 2 படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார்.மேலும்,வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்க, முக்கய கதாப்பாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சூசன்,கோலங்கள் திருச்செல்வம்,ஸ்ரீநாத், ஆகாஷ்,மாஸ்டர் ரோகன்,மாஸ்டர் ஜோஸ்வா,பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள்.நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தை பென் இந்தியா லிமிடெட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நாயகி இன்னும் தேர்வு செய்யப்படாத நிலையில்,மதியழகனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு நிவேதா பெத்துராஜூடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கும்கி 2 படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி படப்பிடிப்பிற்கு பிறகு கும்கி 2 படப்பிடிப்பு தான் அங்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க