• Download mobile app
05 Apr 2026, SundayEdition - 3707
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகி பூரி ரெசிபி!

August 1, 2018 tamilsamayam.com

தேவையான பொருள்கள்:

ராகி மாவு – 1/2 கப்.
கோதுமை மாவு – 1/2 கப்.
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி.
லேசாக சூடு படுத்திய தண்ணீர் – 1/2 கப்.
உப்பு – தேவையான அளவு.
சுடுவதற்கு எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராகி மாவு,கோதுமை மாவு,ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய்,உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.அடுப்பில் கடாயயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவொன்றாக போட்டு எடுக்கவும்.இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.சுவையான ராகி பூரி ரெடி.

மேலும் படிக்க