• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

25 ஆண்டுகள் இயக்குநர் பயணம்: இயக்குநர் ஷங்கரை கெளரவப்படுத்திய உதவி இயக்குனர்கள்

July 31, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றழைக்கப்படும் இயக்குநர் ஷங்கர்.1993ம் ஆண்டு அர்ஜுன் – மதுபாலா நடித்த ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
நேற்றோடு (ஜூலை 30) இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஷங்கரின் திரைப்பயணமும் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.ஷங்கரின் சாதனை தினத்தன்று #25YearsOfDirectorShankar என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.ரசிகர்கள் ஷங்கரின் வெற்றிப் படங்களை நினைவு கூர்ந்தனர்.

இந்நிலையில் அட்லி,பாலாஜி சக்திவேல் உள்பட ஷங்கரிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் குருவை கவுரவப்படுத்தியுள்ளார்.அதில் ஷங்கரிடம் ஆரம்ப காலத்திலிருந்து இப்போது பணிபுரியும் உதவி இயக்குனர்கள் வரை பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது,உதவி இயக்குநர்கள் அனைவரும் ஷங்கரைப் பற்றி தனித்தனியாக எழுதி,அதைத் தொகுத்து ஒரு புத்தகமாக்கி ஷங்கருக்கு பரிசாக அளித்துள்ளனர்.அதை பார்த்து நெகிழ்ந்துபோன ஷங்கர் அந்த நிகழ்வின் போது எல்லோரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும்,அதில் என் உதவி இயக்குநர்களின் இந்த அன்பு என்னை மிகவும் நெகிழச் செய்துள்ளது. நீங்கள் அனைவரும் இல்லை என்றால் என்னுடைய இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க