• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை ரேப் செய்திருப்பேன்- மிஷ்கின் பகீர்!

July 16, 2018 தண்டோரா குழு

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேரன்பு. இப்படத்தின் பாடல் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் மம்மூட்டி, சித்தார்த், அஞ்சலி, ஆன்ட்ரியா, இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாலா, கே.எஸ்.ரவிகுமார், ஏ.எல்.விஜய் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின்,

ராம் இயக்கியுள்ள பேரன்பு படம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்பு. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ராம் என்னிடம் வந்து பேரன்பு தலைப்பை சொன்னபோதே, அதன் வெற்றி நிச்சயமாகிவிட்டது. இந்த படம் ஒரு சிறந்த பாடம். எல்லோர் வீட்டிலும் டி.வி.டி.யாக வைத்திருக்க வேண்டிய படம் பேரன்பு. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனர்களுக்கெல்லாம் குருவாகிவிட்டான் ராம். தேனப்பன் இதுவரை தயாரித்த படங்கள் எல்லாம் படங்களே இல்லை. பேரன்பு தான் அவர் தயாரித்த முதல் படம். இந்த படத்தில் மிக சிறந்த கலைஞனான மம்மூட்டி நடித்திருக்கிறார். நம்ம நடிகர்கள் யாராவது இந்த படத்தில் நடித்திருந்தால், அவ்வளவு தான். ஆனால் மம்மூட்டி வெளிப்படுத்திய உணர்வுகள் அவ்வளவு அற்புதமானது என மம்மூட்டியின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்.

இதன் பின் ஒருபடி மேலே சென்று நான் மட்டும் பெண்ணாக இருந்திருந்தால் அவரை காதலித்திருப்பேன், இல்லை அவரை ரேப் செய்திருப்பேன்,” என இயக்குனர் மிஷ்கின் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

மேலும் படிக்க