• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நயன்தாராவின் கிரீடத்தில் இப்படம் மேலும் ஒரு வைரக்கல்லாக இருக்கும் – சமந்தா டுவீட்

July 11, 2018 தண்டோரா குழு

அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா. இப்படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திலுள்ள “கல்யாண வயசு” எனும் பாடலினை கடந்த மே 17-ம் நாள் படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.மேலும் கடந்த ஜூலை 5-ம் தேதி வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலரை இதுவரை சுமார் 38 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை பார்த்த நடிகை சமந்தா நயன்தாராவுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், இது கொஞ்சம் தாமதம் தான் என்பது எனக்கு தெரியும். கோலமாவு கோகிலா படத்தின் டிரைலர் அற்புதமாக இருக்கிறது. படத்தை திரையில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நயன்தாராவின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக இப்படம் இருக்கும் என புகழ்ந்துள்ளார்.

மேலும் படிக்க