• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்

July 11, 2018 தண்டோரா குழு

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இதில் காலிறுதி போட்டிகள் முடிவடைந்து நேற்று முதல் அரையிறுதி போட்டிகள் துவங்கியது.நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் பிரான்ஸ்,பெல்ஜியம் அணிகள் மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமனில் இருந்தது.அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.இதனை சமன் செய்ய பெல்ஜியம் அணி வீரர்கள் கடுமையாக போராடியும் இறுதிவரை கோல் அடிக்கவில்லை.

இதன்மூலம் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மேலும் படிக்க