• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்?

July 10, 2018 தண்டோரா குழு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை தொடர்ந்து படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். காலா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய படப்பிடிப்பில் ரஜினிகாந்த் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் அடுத்து கே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டபோது ரஜினியே இந்த தகவலை அவரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் வெளியான முத்து, படையப்பா ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. எனினும், இறுதியாக ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய லிங்கா திரைப்படம் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க