• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ் வீட்டில் முத்தம் கேட்ட மஹத் கடுப்பான மும்தாஜ்

July 3, 2018 தண்டோரா குழு

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 3வது வாரத்தை எட்டியுள்ளது.16 போட்டியாளர்களில் மமதி முதலில் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரத்தின் பிக்பாஸ் வீட்டின் தலைவராக வைஷ்ணவி தேர்வாகியுள்ளார்.நண்பர்களாக இருந்த மஹத்,யாஷிகா,ஷாரிக்,ஐஸ்வர்யா இடையே சண்டையும் மனக்கசப்பும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியிடப்பட்டது.
அதில் தண்ணீரை டேங்குக்குள் நிரப்பி,அதை வீணாக்காமல் ஒவ்வொருவரும் சேமிக்க வேண்டும் என புதுவித டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதை ஒவ்வொருவரும் தனது சொந்த முயற்சியால் செய்ய வேண்டும்.பிக்பாஸின் இந்த டாஸ்க்கை மஹத் செய்து கொண்டிருக்க,அவரின் கையை விடுங்கள் என யாஷிகா நகைச்சுவையாக சொல்கிறார்.அதற்கு மஹத் எனக்கு ஒரு முத்தம் கொடு,விட்டுவிடுகிறேன் என சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

இதைப்பார்த்த மும்தாஜ் மஹத்தை கண்டிக்கிறார்.எனினும்,மும்தாஜ் வரும்போது வேண்டுமென்றே யாஷிகாவை அழைத்துப் பேசுவேன் எனவும் மஹத் கூறுகிறார்.எனினும் என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

மேலும் படிக்க