• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“அம்மா”வில் இருந்து விலகிய கேரள நடிகைகளுக்கு நடிகர் பிருத்விராஜ் ஆதரவு

June 29, 2018 தண்டோரா குழு

மலையாள நடிகர்கள் சங்கத்திலிருந்து விலகிய முன்னணி நடிகைகளுக்கு நடிகர் பிரித்விராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.இந்த சங்கத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் இன்னசென்ட் தலைவராக இருந்து வந்தார்.இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் பதவியில் இருந்து விலகினார்.இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில்,சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே,மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவின் புதிய தலைவராக மோகன்லால் பதவியேற்றப்பின்,நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட திலீப் அதில் மீண்டும் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.இதற்கு WCC என்ற பெண் சினிமாக் கலைஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தற்போது,நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கும் திலீப்பிற்கு ஆதரவாக செயல்படும் மலையாள நடிகர்கள் சங்கத்திலிருந்து ரம்யா நம்பீசன்,ரீமா கல்லிங்கள்,கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட நடிகைகள் விலகினர்.அவர்களின் இந்த முடிவுக்கு பல்வேறு நடிகர்களும்,நடிகைகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் திலீப்புக்கு கண்டனம் தெரிவித்து நடிகைகள் விலகியதற்கு நடிகர் பிரித்விராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க