• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் சங்கத்திலிருந்து நடிகைகள் விலகல்

June 27, 2018 தண்டோரா குழு

மலையாள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர்கள் சங்கத்திலிருந்து முன்னணி நடிகைகள் சிலர் விலகியுள்ளனர்.

கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.இந்த சங்கத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் இன்னசென்ட் தலைவராக இருந்து வந்தார்.இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் பதவியில் இருந்து விலகினார்.இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில்,சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில்,நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார்.கடந்த ஆண்டு நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டார்.இதைதொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.இந்நிலையில்,திலீப் சங்க உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில நடிகைகள் நடிகர் சங்கத்தில் இருந்து விலகியுள்ளனர்.

அம்மாவின் தலைவராக மோகன்லால் பதவியேற்று சில நாட்களே ஆகும் நிலையில்,இந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க