• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலையாள நடிகர் சங்க தலைவரான மோகன்லால்:மீண்டும் உறுப்பினரானார் திலீப்

June 25, 2018 தண்டோரா குழு

கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.இந்த சங்கத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் இன்னசென்ட் தலைவராக இருந்து வந்தார்.இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் பதவியில் இருந்து விலகினார்.இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில்,சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில்,நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார்.முன்னதாக,இவர் நடிகர் சங்கத்தில் பொருளாளராக பதவி வகித்து வந்தார்.கடந்த ஆண்டு நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டார்.இதைதொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.இந்நிலையில்,நேற்றைய கூட்டத்தில் திலீப் சங்க உறுப்பினராக மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க