• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறபோகும் நபர் யார் ?

June 19, 2018 தண்டோரா குழு

மக்கள் பெரிதும் எதிர்பார்த்த கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ 2 நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி துவங்கியது.16 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிக் பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.ஆனால் இது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது. ஆனால்,அடுத்த வாரத்தில் வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் என்ற தகவல் கசிய தொடங்கியுள்ளது.

அது வேறு யாரும் இல்லை பிரபல பாடகரான ஆனந்த் வைத்தியநாதன் தானாம்.ஏனெனில்,அவர் யாருடனும் பேசாமல் பழகாமல் தனிமையிலேயே இருப்பதால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும்,என்ன நடக்க போகிறது? முதலில் வெளியேற போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க