• Download mobile app
16 Aug 2026, SundayEdition - 3840
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் தேபெருமாநல்லூர், கும்பகோணம்

June 16, 2018 findmytemple.com

சுவாமி:ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்.

அம்பாள்:ஸ்ரீ லக்ஷ்மி.

தலச்சிறப்பு:பெருமாளுக்கு சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம்,ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் அடையலாம்.நவக்கிரகங்களில்,சனிபகவானை ஆயுள்காரகன் என்பர்.சனிபகவானின் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும்.ஆனால்,பெருமாள் சனிபகவானைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர்.சனிக்கு அதிபதி பெருமாள்.எனவே,சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று.

சனிக்கிழமை விரதம் எளிமையானது.பகலில் பழம்,தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு,இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்.மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம் ஆகும்.இதுவரை விரதம் இருக்காதவர்கள்,புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று விரதம் அனுஷ்டித்தால்,சகல செல்வமும் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை.உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய சிறந்த பலனை தரும்.

நடைதிறப்பு:காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை,மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம்:கும்பகோணம்.

கோயில் முகவரி:ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில்,தேபெருமாநல்லூர், கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க