• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாய்க்கு செம்ம மவுசு !

June 8, 2018 தண்டோரா குழு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.தனுஷ் தயாரிப்பில் உருவான இப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

முதன் முதலில் காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே பலரும் கவனித்த ஒரு முக்கியமான விஷயம்.அதில் ரஜினிக்கு அருகே இருக்கும் நாய்.காலா படத்தில் ஆசாமி என்ற பெயரில் நடித்துள்ள இந்த நாயின் உண்மையான பெயர் மணி.

ரஞ்சித்,இப்படத்திற்காக நிறைய நாய்களை அழைத்து வரச் சொல்லி ஆடிஷன் நடத்தியுள்ளாராம். இதன் பயிற்சியாளர் சைமன், நாயை இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு காட்டியதில் 30 நாய்களைப் பார்த்து திருப்தியடையாமல் இருந்த அவர் உடனே காலா படத்தில் மணியை நடிக்க வைத்தார்.

இந்நிலையில்,ரஜினியுடன் ‘காலா’ படத்தில் நடித்ததையடுத்து இந்த நாயை ரூ.2 கோடி வரை கொடுத்து வாங்க வெளிநாட்டில் சிலர் தயாராக இருக்கிறார்களாம்.ஆனால் இதை வளர்க்கும் சைமன் தன்னுடைய பிள்ளை போல் வளர்ப்பதால் கொடுக்க மனமில்லை என்று மறுத்துள்ளாராம்.காலா படத்தில் நடித்து அந்தப் படம் வெளியாவதற்குள் ‘மெஹந்தி’ சீரியல் உட்பட நான்கு படங்களில் இந்த நாய் என்பது நடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க