• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில் பக்தி கொண்டவர் த்ரிஷா: விஜய் சேதுபதி புகழாராம்!

June 6, 2018 tamilsamayam.com

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘96’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் அவர் மூன்று கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கி வருகிறார்.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் மூன்று விதமான கெட்டப்பில் நடித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷாவுடன் நடித்த அனுபவம் குறித்து கூறுகையில்,”த்ரிஷா ரொம்பவே நடிப்பை நேசிப்பவர்.எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதை முழுமையாக உணர்ந்து நடிக்கிறார். அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன்.அதிகப்படியான தொழில் பக்தி கொண்டவர் நடிகை த்ரிஷா.ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருநாள்கூட தாமதமாக வந்ததில்லை.இப்படி தொழில் மீது அவர் வைத்துள்ள மரியாதை காரணமாகத்தான் அவர் 15 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாகவே வலம் வருகிறார்” என்றார் விஜய் சேதுபதி.

மேலும் படிக்க