• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘காலா’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா ?

June 5, 2018 தண்டோரா குழு

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்ஜித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.இந்த வாரம் திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு பல இடங்களில் புக்கிங் தொடங்கி விட்டனர்.ஆனால்,காவிரி விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் காலா படம் கர்நாடகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காலா திரைப்படத்தை வெளியிடக் கோரி தயாரிப்பாளர் தனுஷ் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அப்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவில் காலா படம் ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்றும்,அதனால்,இப்படத்திற்கு கர்நாடகாவில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்றும் அதனால் வசூல் ஆகிவிடும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில்,இப்படத்திற்கு இவ்வளவு பட்ஜெட்டா⁉ என்று அனைவரும் சற்று அதிர்ந்து போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க