பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு, எங்க வீட்டுப் பிள்ளை என்று பெயர் வைக்கவிருப்பதாகத் தகவல். எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளையை தயாரித்த விஜயா ஸ்டுடியோஸே விஜய் படத்தையும் தயாரிப்பதால் பெயரை வைக்க யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை.ஆனால், எம்.ஜி.ஆர் இன்றும் பல்லாயிரம் ரசிகர்களின் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரது புகழின் ஒரு துணுக்கைக்கூட இன்னொருவர் எடுத்துக் கொள்வதை பொறுக்காதவர்கள் ரசிகர்கள்.
எங்க வீட்டுப் பிள்ளை என்றால் அவர்களுக்கு எம்.ஜி.ஆர் மட்டுமே. அதனை விஜய்க்கு விட்டுத்தர அவர்கள் தயாராக இல்லை. அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கத்தினர், எங்க வீட்டுப் பிள்ளை பெயரை விஜய் படத்துக்கு வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, வரும் 14ஆம் தேதி விஜய் வீட்டு முன் போராட்டம் நடத்துவது என்றும், அதற்குப் பிறகும் பெயரைப் பயன்படுத்தினால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்