• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் சேதுபதி படத்தில் பாடும் ராக்ஸ்டார் ரமணியம்மாள்

May 26, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய் சேதுபதி தற்போது கோகுல் இயக்கத்தில் தற்போது ‘ஜுங்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் பாரிஸில் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது படப்பிடிப்பு பெரும்பாலும் நடந்து முடிந்துள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதி கோகுல் கூட்டணியில் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” திரைப்படம் வெளியாகி செம ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்ற ராக்ஸ்டார் ரமணியம்மாள் பாடியுள்ளார். அதனால் இந்த படத்திற்கு இப்போதே கூடுதல் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க