• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிபா வைரஸ் எதிரொலி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை- கேரள அரசு அறிவிப்பு

May 24, 2018 தண்டோரா குழு

கேரளாவில்,’நிபா’ வைரஸ் பாதிப்பு இருப்பதால்,நான்கு மாவட்டங்களுக்கு செல்வதை,தற்காலிகமாக தவிர்க்கும்படி,கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு,மலப்புரம்,வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நிபா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்தியக் சுகாதாரத்துறைக் குழு கேரளா மாநிலத்திற்கு விரைந்து அங்கு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதற்கிடையில்,கர்நாடக மாநிலம் மங்களூரில் இருவருக்கும்,கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும்,நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மூவரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.அவர்கள்,தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,கேரள அரசு நிபா வைரஸ் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.இந்நிலையில் கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,பிறபகுதிகளைச் சேர்ந்தோர், கேரளாவின் கோழிக்கோடு,மலப்புரம்,கோட்டயம் மற்றும் கேரளா அருகே உள்ள,கர்நாடகாவின் மங்களூரு ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதை,தற்காலிகமாக தவிர்க்கும்படி,கேரள சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க