• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விபத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தந்தை இருவரும் தற்கொலை

May 22, 2018 தண்டோரா குழு

மகன் இறந்துபோன துக்கம் தங்காமல் தந்தையும் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈக்காட்டூர் பகுதியை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நிசாந்த். இவர் தனது உறவினர் ஆன கிருபாகரனுடன் நேற்று மாலை கோவையிலிருந்து நாமக்கல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.

அதே நேரத்தில் கோவையிலிருந்து பேப்பர்கப் தயாரிக்கும் இயந்திரம் ஏற்றி கொண்ட ஆட்டோவும் சென்றுகொண்டிருந்தது.எதிர்பாரத விதமாக ஆட்டோவில் இருந்த பேப்பர்கப் தயாரிக்கும் இயந்திரம் தேசியநேடுஞ்சலை பகுதியில் தவறிவிழுந்தது. அதே வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தவறி விழுந்த இயந்திரத்தை ஆட்டோவில் ஏற்றுவதற்கு உதவி செய்துகொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக அந்த பேப்பர்கப் இயந்திரம் மீதும் அங்கு உதவி செய்துகொண்டிருந்த நபர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நிசாந்த் மற்றும் கிருபாகரன் சாம்ப இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அங்கு உதவி செய்து கொண்டிருந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

சம்பவ இடத்திலேயே இறந்த நிசாந்த் மற்றும் கிருபாகரன் உடலை அவினாசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் பின் அடையாளம் கட்டுவதற்காக வந்த நிசாந்த்-ன் தந்தை சக்திவேல் மற்றும் அவரது தாய் சுதா துக்கம் தாங்க முடியாமல் மருத்துவமையில் உள்ள குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தனர்.இதனை அறிந்த உறவினர்கள் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று காலை இறந்தனர்.

இவர்களது உடல் திருப்பூர் அரசு மருத்துவமைக்கு அனுப்பிவைக்கபட்டது. மகனை பிரிந்த துக்கத்தில் அவரது பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க