• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

May 18, 2018 தண்டோரா குழு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டால் அரசு பள்ளியில் சேர்க்கை குறைவதாகவும்,இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிநிரவலை முழுமையாக கைவிட வேண்டும்,ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் உள்ளே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்,கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி,ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதாகவும் எனவே அரசு உடனடியாக இதனை கைவிட வேண்டும் என ஆசிரியர்கள் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க