• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊட்டியில் 122வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

May 18, 2018 தண்டோரா குழு

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

உதகையின் மணிமகுடமாக திகழும் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 122வது மலர் கண்காட்சியை இன்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.

ஐந்து நாட்கள் நடக்கும் இந்த மலர்க் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 1லட்சம் மலர்களை கொண்டு மேட்டூர் அணை, 3500 மலர்களை கொண்டு பார்பி டால் மாதிரி,25 ஆயிரம் மலர்களை கொண்டு வரவேற்பு அலங்காரம்,300 கிலோ வாசனை திரவிய பொருட்களை கொண்டு வள்ளுவர் கோட்டம் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 40 ஆயிரம் மலர் தொட்டிகளில் 170 ரகங்களில் சால்வியா,பெட்டூனியா, மேரி கோல்டு,பிரெஞ்சு மேரி கோல்டு,டேலியா உள்ளிட்ட மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

மேலும் படிக்க