• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மற்ற மாநிலங்கள் போல ஆட்சி அமைப்பதில் முறைகேடு கூடாது – பரமேஸ்வரா, குமாரசாமி கூட்டாக பேட்டி

May 16, 2018 தண்டோரா குழு

மற்ற மாநிலங்கள் போல் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் முறைகேடு நடந்துவிடக்கூடாது என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மஜத தலைவர் குமாரசாமி கூறியுள்ளனர்.

கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இதைடுத்து மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து. காங்கிரஸ், மஜத சேர்ந்த 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோரும் சென்றனர்.
ஆளுநரிடம் கடிதத்தை அளித்துவிட்டு குமாரசாமியும் , காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,

117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு பெரும்பான்மை உண்டு. இதனால் ஆட்சி அமைக்க எங்களைத்தான் ஆளுநர் அழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஆளுநர் செயல்பட வேண்டும். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மேலும் சரியான முடிவை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மற்ற மாநிலங்கள் போல ஆட்சி அமைபதில் முறைகேடு கூடாது. அரசியல் சாசன சட்டத்துக்குட்பட்டு ஆளுநர் நடக்க வேண்டும். இரு கட்சி எம்எல்ஏக்களும் யாரும் அணி தாவவில்லை. மஜதவுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை தந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க