• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொச்சியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்லும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள்

May 16, 2018 தண்டோரா குழு

ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கொச்சியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 104 தொகுதிகளை வென்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் பா.ஜ.க அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில்,காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் 2 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.இதையடுத்து,ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கர்நாடக எம்.எல்.ஏ-க்களுக்கு கேரளா சுற்றுலாத்துறை ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க