பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அபார வெற்றி பெற்றது.11வது ஐபிஎல் தொடரின் 34வது ஆட்டத்தில் பஞ்சாப்,மும்பை அணிகள் நேற்று மோதின.டாஸ் வென்ற மும்பை அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் ராகுல்,கெய்ல் அதிரடி காட்டினர்.அதிகபட்சமாக கெய்ல் 50(40) ரன்களும்,ஸ்டோனிஸ் 29(15)* ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.மும்பை அணி சார்பில் மிட்செல், பும்ரா,பாண்டியா,மார்கண்டே,கட்டிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய மும்பை அணி தொடக்க வீரர் சூர்யாகுமார் யாதவ்,லெவிஸ் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.அதிகபட்சமாக சூர்யகுமார் 57,பாண்டியா 31,கிஷான் 25 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் அணி சார்பில் முஜீப் 2 விக்கெட் வீழ்த்தினார்.19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, மும்பை அணி 176 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் வெற்றி பெற்று,புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு மும்பை முன்னேறியுள்ளது.
வடகோவை சிந்தாமணி சந்திப்பில் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு!
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றத்தை வழிநடத்தும் பிராண்டாக அடிசியா தொடர்ந்து பயணிக்கும் – மணிகண்டன்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை