• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் புத்தாக்க பயிற்சி சேலம் ஏற்காடு அடிவாரத்தில் நடைபெற்றது

July 30, 2016 தண்டோரா குழு

காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி கையாள்வது தொடர்பான துப்பாக்கிச் சுடும் புத்தாக்க பயிற்சி சேலம் அடிவாரத்தில் உள்ளத் துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.

மேற்கு மண்டல காவல்துறையை சேர்ந்த கோவை மாநகர காவல் ஆணையாளரும் மேற்கு மண்டல காவல்துறை பொறுப்பு தலைவருமான அமல்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடும் பயிற்சியில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களின் காவல் துறை கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் சரியாக இலக்கை நோக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக கமாண்டோ உயர் அதிகாரி இளங்கோவன் தலைமையிலான கமாண்டோக்கள் பத்து பேர்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு நவீன ரகத் துப்பாக்கிகள் கையாள்வது குறித்தும், துப்பாக்கியைக் கொண்டு இலக்கை நோக்கிச் சுடுவது குறித்தும், பயிற்சி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் பத்து மீட்டர், பதினைந்து மீட்டர் தொலைவிலிருந்து இலக்கினை நோக்கிச் சுட்டனர்.அப்போது சில அதிகாரிகளுக்கு முதலில் கை நடுக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டனர்.

மேலும் படிக்க