• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

July 30, 2016 தண்டோரா குழு

சமீபமாகக் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் அங்கே உற்பத்தியாகி தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகத் தமிழகத்தில் பாடும் தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து 47.2 அடியை எட்டியது. இதனால் அணை அதன் முழு கொள்ளளவை எப்போது வேண்டுமானாலும் எட்டும் நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து அணையில் இருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்பதாலும், ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 2,320 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளதால், அணையின் பாதுகாப்பை கருதி வரும் நீர் அப்படியே வெளியேற்றப் பட்டு வருவதாலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டத்தில் உள்ள தென்பெண்னை ஆற்றுக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 1,447 கன அடியாக உள்ளது. இதனால் வேகமாக அதன் முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க