• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புனேவில் கட்டுமான இடிபாட்டில் சிக்கி 9 பேர் பலி

July 29, 2016 தண்டோரா குழு

புனே நகரில் பலேவடி என்ற பகுதியில் ப்ரைட் எக்ஸ்பிரஸ் என்ற குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை 13வது மாடியில் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, அங்குக் கட்டப்பட்டிருந்த ஸ்லாப் உடைந்து கீழே வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

இதில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புனே மாநகராட்சி காவல்துறை துணை ஆய்வாளர் பி.டெலி கூறும்போது, 13வது மாடியில் சிமென்ட் பலகையை நகர்த்தி வேலை செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 14 பேர் வேலை செய்துவந்துள்ளனர்.

மீதமிருப்பவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். மேலும் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் குறித்து தகவல் திரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க